Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றிய க‌ட்ச‌ிகளுட‌ன் அ.தி.மு.க. வை‌த்து‌க் கொ‌ண்ட கூ‌‌ட்ட‌ணி

Advertiesment
உள்ளாட்சி தேர்தல்
, புதன், 28 செப்டம்பர் 2011 (13:17 IST)
உள்ளாட்சி தேர்தலில் நடிக‌ர் சர‌‌த்குமா‌‌ரி‌ன் அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி உ‌ள்‌ளி‌ட்ட 6 கட்சிகளுட‌ன் சே‌ர்‌ந்து அ.இ.‌தி.மு.க. கூ‌ட்‌ட‌ணி அமை‌த்து போ‌ட்டி‌யிடு‌கிறது.

உ‌ள்ளா‌ட்‌சி‌ மன்றத் தேர்தலை முன்னிட்டு, இடப்பங்கீடு குறித்து, அ.தி.மு.க.வுக்கும், தோழமைக்கட்சியான செ.கு.தமிழசனை தலைவராகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்திய குடியரசுக்கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், அ.தி.மு.க.வுக்கும், தோழமைக்கட்சிகளான பி.வி.கதிரவனை தமிழ் மாநில பொதுச்செயலாளராகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, எஸ்.ஷேக் தாவூத் தலைவராகக்கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி‌க்கு‌ம் இடையே தொகு‌தி உட‌ன்பாடு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

உ.தனியரசு நிறுவன அமைப்பாளராகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுடனும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அ.‌தி.மு.க தலைமை அலுவலக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்குற‌ி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil