நில அபகரிப்பு வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 51 நாள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று ஜாமீனில் விடுதலையானார்.
நில அபகரிப்பு வழக்கில் கடந்த ஜூலை 31ஆம் தேதி தி.மு.க. முன்னாள் அமைச்சர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து விடுதலையாவி வெளியே வருவார் என்று எதிர்பார்த்த கடந்த மாதம் 5ஆம் தேதி மீண்டும் ஒரு நில அபகரிப்பு தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பிணை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் கேட்டு மனு செய்தார். இதை மனுவை விசாரித்த நீதிபதி டி.சுதந்திரம், வீரபாண்டி ஆறுமுகத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
இதையடுத்து திருச்சி சிறையில் இருந்து இன்று வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்க அவரை சிறைவாசலில் தி.மு.க.வினரும், உறவினர்களும் வரவேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி பூக்கடை காவல் நிலையத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தினமும் கையெழுத்திட வேண்டும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.