உலக அமைதி, நல்லிணக்கதை வலியுறுத்தி குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இருக்கும் உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க சார்பில் எம்.பிக்கள் தம்பித்துரை, மைத்ரேயன் கலந்து கொள்வார்கள் என்று அக்கட்சித் தலைவர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நாளை முதல் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க தலைவர்கள் அத்வானி, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மோடி அறிவித்துள்ள 3 நாள் உண்ணாவிரதத்துக்கு அ.தி.மு.க எம்.பி.க்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்து கலந்து கொண்வார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.