தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் காவல்துறையினர் இன்று திடீரென கைது செய்துள்ளனர்.
நில அபகரிப்பு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2 வழக்குகள் பதிவு செய்ததைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை மனுக்கள் தாக்கல் செய்தார்.
இந்த முன்பிணை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு நாட்கள் வீரபாண்டி ஆறுமுகத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் 27ஆம் தேதி முன்பிணை பெற்றுக் கொண்டு தினமும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து 2 நாள் காவல்துறை விசாரணைக்கு பின்னர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தார். அப்போது நிலவாரப்பட்டி பாலமோகன் ராஜ் கொடுத்த நில அபகரிப்பு புகார் தொடர்பாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் அய்யந்திருமாளிகையில் உள்ள 4வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.