இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் 800 விசைப்படகுகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர்கள் 1000 பேர் கடலுக்கு செல்லவில்லை.
இதனிடையே தமிழக மீன்வளத்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க 23 மீனவர்கள் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.