தமிழக மீனவர்கள் 23 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை தூதரகம் கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்தது.
தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் வைகோ, ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 23 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.