முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக நீதிபதிக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சம்பந்தத்துக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக நேரிடையாக நீதிபதிக்கு தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சம்பந்தம் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து மேல் விசாரணை நடத்த இருப்பதாக கூறியிருந்தார் சம்பந்தம்.
இதனிடையே நீதிபதிக்கு சம்பந்தம் நேரிடையாக கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நீதிபதிக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியிருந்தார் சம்பந்தம்.
இந்த நிலையில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான டி.எஸ்.பி. சம்பந்தத்துக்கு நீதிபதி மல்லிகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்தார்.