சென்னையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று கட்டணம் வாரியாக மாணவர்களை தரம் பிரித்து நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லிவாக்கத்தில் உள்ள சாரங்கபாணி என்ற தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி. இந்த பள்ளியில் மாணவர்களை தரம் பிரித்து வகுப்பு நடத்தப்படுவதாக கூறி பெற்றோர்கள், புரட்சிகர மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை தந்தால் மாணவர்களுக்கு நாட்டமில்லாமல் நிர்வாகம் பாடம் நடத்துவதாக அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
பள்ளி நிர்ணயித்த கட்டணத்தை தந்தால் தனிக் கவனம் செலுத்தி தரமான கல்வி கற்றுத்தரப்படும் என பள்ளி நிர்வாகம் கூறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.