அரசு கல்லூரி முதல்வராக கண் பார்வையற்ற பேராசிரியர் நியமனம்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
திருப்பூர் மாவட்டம் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி முதல்வராக கண் பார்வையற்ற பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்கல்லுரிக்கு, பிரபு என்கிற 55 வயது, அங்கில இலக்கியம் படித்த பேராசிரியர், புதிய முதல்வராக நியாமிக்கப்பட்டுள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஏற்பட்ட நோயினால், கண் பார்வையை இழந்த இவர், சென்னை கிரித்துவக்கல்லுரியில் ஆங்கிலம் பயின்றவர், பி.எச்.டியில் தங்கப்பதக்கம் வென்று, முனைவர் பட்டம் வாங்கியுள்ளார்.
கடந்த, முப்பது ஆண்டுகளாக ஆங்கில பேராசிரியராக பணியாற்றும் இவர், மாணவர்களுக்கு ஆறு மாதத்தில் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலை கற்றுக்கொடுத்து விடுவார்.
ஹரியான பி.பி.எஸ் பெண்கள் கல்லூரி, சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லுரி போன்ற கல்லூரிகளில் பணியாற்றிய இவர், திருப்பூர் சிக்கன்னா கலைக்கல்லுரிக்கு முதல்வராக செல்வதற்கு முன்னர் சென்னை பிரசிடென்சி கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவராக இருந்துள்ளார்.
தமிழகத்தில் கண்பார்வை இல்லாத ஒருவர் முதல்வராக பொறுப்புக்கு வந்துள்ளது எதுதான் முதல் முறை என்று சொல்லப்படுகிறது.