Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் இன்று வெளியீடு

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் இன்று வெளியீடு
, திங்கள், 13 ஜூன் 2011 (10:06 IST)
த‌னியா‌ர் ப‌ள்‌ளிகளு‌க்கான புதிய கல்வி கட்டண‌‌த்தை ர‌விராஜாபா‌ண்டிய‌ன் குழு இ‌ன்று வெ‌ளி‌யிடு‌கிறது.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அரசுக்கு புகார் வ‌ந்ததை தொடர்ந்து கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஒவ்வொரு பள்ளிக்கும் தனி கட்டணம் நிர்ணயித்து வெளியிட்டது. ஆனால் அந்த கட்டணம் போதாது என்று கூறி 6,400 பள்ளிகள் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் முறையீடு செய்தன.

இதைத்தொடர்ந்து அந்த பள்ளிகளுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயிக்கும்படி உய‌‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. இந்த நிலையில் உடல் நலம் சரியில்லாமல் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் மாவட்டம் வாரியாக பள்ளிகளை அழைத்து பள்ளிகளின் விவரங்களை கேட்டறிந்தார்.

சுயநிதி பள்ளிகளின் கட்டண நிர்ணயக்குழுவிடம் மேல்முறையீடு செய்த 6,355 பள்ளிகளுக்கு நேர்முக கேட்பில் கலந்து கொள்ள மாவட்டம் வாரியாக அழைப்பு அனுப்பப்பட்டது. நேர்முக கேட்பு 15.11.2010 முதல் 4.5.2011 வரை நடைபெற்றது.

ஒவ்வொரு பள்ளியும் அளித்த விவரங்கள் மேல்முறையீடு செய்த போது அளித்த விவரங்கள் நேர்முக கேட்பின்போது அளித்த விவரங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து தணிக்கையாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தி மீண்டும் சரிபார்த்து இறுதி ஆணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றங்களின் தீர்ப்புகளின்படி கட்டண நிர்ணயக்குழு, இறுதி ஆணைகளை வெளியிட தமிழ்நாடு அரசு இசைவு அளித்துள்ளது. 10.6.2011 அன்று கூடிய கமிட்டியின் கூட்ட முடிவு படி மேல் முறையீடு செய்த பள்ளிகளின் இறுதியாணைகள் 13ஆ‌ம் தேதி (இன்று) அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்படும். அவர்கள் மூலம் பள்ளிகளுக்கு கட்டணம் தெரிவிக்கப்படும்.

இந்த கட்டண விவரம் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் கட்டண விகிதத்தை வழங்குவார். மேலும் பள்ளிக் கட்டண முழு விவரமும் பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil