கோவை மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் உள்பட 21 மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு அதிரடியாக மாற்றியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த பி.உமாநாத், நிதித்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் ஆட்சியராக இருந்த பி.சீத்தாராமன், சுனாமி நீடித்த வாழ்வாதார திட்ட இயக்குனராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.வள்ளலார், தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு ஆட்சியர் சி.காமராஜ், போக்குவரத்து துறை துணை செயலராகவும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெ.உமா மகேஸ்வரி, உயர் கல்வித்துறை இணை செயலராகவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எம்.விஜயகுமார், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலராகவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.சுகந்தி, சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை துணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் டி.என்.அரிகரன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை துணை செயலராகவும், சேலம் மாவட்ட ஆட்சியர் ஜெ.சந்திரகுமார், வருவாய் துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம், தொழில் துறை இணை செயலராகவும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் எம்.ஜெயராமன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ், தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலைய துறை, செய்தித்துறை துணை செயலராகவும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி, பொதுத்துறை இணைச் செயலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம், வேளாண்மைத்துறை இணை செயலராகவும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.கே.பொன்னுசாமி, எரிசக்தித்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.பழனிக்குமார், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலராகவும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.மதுமதி, சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் (சுகாதாரம்) மாற்றப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வி.சம்பத், தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவன நிர்வாக இயக்குனராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன், நில வடிநீர் முகமை செயல் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.