ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது தென்மேற்கு பருவகாற்று படத்தில் நடந்த சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளத்தை படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் சிறந்த இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு தங்கத்தாமரை விருது கிடைத்துள்ளது.
சிறந்த திரைக்கதைக்கான விருதும் வெற்றிமாறன் பெற்றுள்ளார்.
ஆடுகளம் படத்தின் நடன இயக்குனரான தினேஷ்குமாருக்கு சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
மைனா படத்தில் படத்தில் நடந்த தம்பி ராமையா சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.