Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்குப்பதிவின் போது ரஜினி 2 தவறுகள் செய்துவிட்டார்: எஸ்.வி. சேகர்

வாக்குப்பதிவின் போது ரஜினி 2 தவறுகள் செய்துவிட்டார்: எஸ்.வி. சேகர்
கும்பகோணம் , ஞாயிறு, 17 ஏப்ரல் 2011 (13:30 IST)
வாக்குப்பதிவின்போது நடிகர் ரஜினிகாந்த் இரண்டு தவறுகளை செய்துவிட்டார் என்று மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகருமான எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 பேரை தங்கபாலு நீக்கியதாக பத்திரிகையில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.எனக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான தன்னிலை விளக்கம்கேட்டு கடிதம் வரவில்லை. நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.

நான் உள்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. இதுபோன்ற அதிகாரம் சோனியாகாந்தி,ராகுல்காந்தி ஆகியோருக்கு மட்டும்தான் உண்டு.

காங்கிரஸ் கட்சியில் இருந்து முதலில் நீக்கப்படவேண்டியவர் தங்க பாலுதான்.மயிலாப்பூர் தொகுதியில் கொல்லைப்புறம் வழியாக வந்து வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்ற பயத்தில்தான் காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பல கோஷ்டிகளாக காங்கிரசார் செயல்படுகின்றனர் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் தங்கபாலு எங்களை நீக்கிய தன் மூலம் அனைத்து கோஷ்டியினைரையும் ஒற்றுமையாக செயல்பட செய்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

வாக்குப் பதிவின்போது நடிகர் ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார்.அனைவரையும் வைத்துக் கொண்டு வாக்குபதிவு செய்தது.வாக்குபதிவு செய்தவுடன் மாற்றம் தேவை என மக்கள் மத்தியில் முடிவு எடுத்ததாக கருத்து தெரிவித்தது.

தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது தேர்தல் முடிவு வந்த பின்னரோ இந்த கருத்தை அவர் தெரிவித்து இருக்கலாம்.மக்களிடம் அதிக விழிப்புணர்வை உண்டாக்கி பெரும்பாலானோரை வாக்களிக்க செய்த தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும்.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் 6 வது முறையாக கருணாநிதி முதலமைச்சர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil