Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலவச செல்பேசி: புதுவையில் காங். அதிரடி

Advertiesment
இலவச செல்பேசி: புதுவையில் காங். அதிரடி
, வெள்ளி, 1 ஏப்ரல் 2011 (13:40 IST)
இலவச டிவி, இலவச கிரைண்டர், இலவச வாஷிங்மெஷின், இலவச பிரிட்ஜ் வரிசையில் தற்போது காங்கிரஸ் ஒரு படி மேலே போய் இலவச செல்பேசி வழங்குவதாக தனது புதுவை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என புதுவை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆண்டு வருமானம் 75 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் இந்த இலவச செல்பேசியப் பெறுவதற்கு தகுதியானவர்கள் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 பக்க தேர்தல் அறிக்கையை முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் புதுவை காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் வெளியிட்டார்.

புதுவை மாகாணம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil