இலங்கையின் பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன் பிணை மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
1986 ஆம் ஆண்டு சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்று 1994ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கக் கோரி டக்ளஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததால் முன் பிணை கோரி டக்ளஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பதில்அளிக்க அரசு அவகாசம் கேட்டதால் விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.