மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ராஜினாமா கடிதம் ஏதும் கொடுக்கவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதை அவர் தெரிவித்தார்.
அலைக்கற்றை விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த கருணாநிதி, இந்தப் பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கும்போது நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த கருணாநிதி, அலைக்கற்றை விவகாரம் குறித்து பிரதமர் உட்பட அனைவரும் பதில் சொல்லியாகி விட்டது. குறிப்பாக, மத்திய அமைச்சர் கபில்சிபில் விவரமாகக் கூறி இருக்கிறார். நான் எதுவும் சொல்வதற்கு இல்லை என்று தெரிவித்தார்.