மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிந்து விழுந்துள்ளதால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையிலான இரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலை அடுத்த பள்ளியாடியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும். தண்டவாளத்தில் விழுந்த மண்ணை அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே இரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் இரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 12ஆம் தேதி புறப்பட வேண்டிய சிறப்பு இரயிலும் (06304), மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து வரும் 13ஆம் தேதி நாகர்கோவிலுக்கு செல்லும் ௦சிறப்பு இரயிலும் (06304) ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் இரயிலும் (வண்டி எண்கள் 371, 372, 373, 374, 375, 376, 377) வரும் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல், நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் பயணிகள் இரயிலும் (391, 394) ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - கோட்டயம் இடையே இயக்கப்படும் பயணிகள் இரயில் (364), நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை - கொல்லம் இடையே இயக்கப்படும் பயணிகள் இரயிலும் (727, 728) நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்பட்டுள்து.
சென்னை எழும்பூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு இரயில் (6127, 6128) நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் விரைவு இரயில் (6381), நேற்று முதல் (10ஆம் தேதி) முதல் 14ஆம் தேதி வரை, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் விரைவு இரயில் (6526) நேற்று முதல் (10ஆம் தேதி) முதல் 14ஆம் தேதி வரை திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் புறப்பட வேண்டிய விரைவு இரயிலும் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு இரயில் (6723), 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்தே இந்த இரயில், 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சென்னை புறப்பட்டு செல்லும்.
மங்களூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு இரயில் (6605, 6606), திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. சாலிமரில் இருந்து நாகர்கோவில் வரும் விரைவு இரயிலும் (6335) திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படுகிறது. பின்னர், 12ஆம் தேதி அங்கிருந்தே சாலிமர் புறப்பட்டு செல்கிறது.
இதேபோல், காந்திதாமில் இருந்து 12ஆம் தேதி நாகர்கோவில் வரும் விரைவு இரயில் (6335) திருவனந்தபுரத்திலேயே நிறுத்தப்படும். பின்னர், அங்கிருந்தே 14ஆம் தேதி காந்திதாமுக்கு புறப்பட்டு செல்கிறது.
திருநெல்வேலியில் இருந்து 12ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு பிளாஷ்பூர் செல்ல வேண்டிய விரைவு இரயில் (2788) அதே நாள் காலை 7.30 மணிக்கு தாமதமாக புறப்பட்டு செல்வதுடன், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
ஹாபாவில் இருந்து திருநெல்வேலிக்கு 12, 13ஆம் தேதிகளில் வரும் விரைவு இரயில் (2998) சோரனூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக மாற்றுப்பாதையில் வந்து இரவு 7.05 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். திருவனந்தபுரம் செல்வதற்காக இந்த இரயிலில் வருபவர்கள் சோரனூரில் இறங்கி, அங்கிருந்து லோக்மானியா திலக் - திருவனந்தபுரம் விரைவு இரயிலில் ஏறி செல்லாம்.
திருநெல்வேலியில் இருந்து ஹாபாவுக்கு 13, 14ஆம் தேதிகளில் புறப்படும் விரைவு இரயில் (2997) மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சோரனூர் வழியாக இயக்கப்படும். அதன் பின்னர் வழக்கமான பாதையில் செல்கிறது.
கொல்லம் - மதுரை இயக்கப்படும் பயணிகள் இரயில் (728), 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
சென்னை எழும்பூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு இரயில், குருவாயூரில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு வந்து 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, காலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.