நாகை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக 26 செ.மீட்டர் மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 23, சேத்தியாதோப்பில் 22, நாகை மாவட்டம் மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோயில், தொழுதூர் தலா 21, கடலூர், சிதம்பரம் தலா 20, பரங்கிபேட்டை, காரைக்கால் தலா 19 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
திருவாரூர் 18, உளுந்தூர்பேட்டை, கொள்ளிடம், தரங்கம்பாடி தலா 17, பண்ருட்டி, நாகப்பட்டினம், ஜெயங்கொண்டம் தலா 16, ஸ்ரீமுஷ்ணம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி விமான நிலையம் தலா 15 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நன்னிலம், நீடாமங்கலம் தலா 13, கொடவாசல் 11, செஞ்சி 12, விழுப்புரம், கும்பகோணம் தலா 10, சங்கராபுரம், திருக்கோவிலூர், பாபநாசம், திருவிடைமருதூர், வலங்கைமான் தலா 9 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
மன்னார்குடி, குளித்துறை தலா 8, தஞ்சாவூர், வல்லம், குளச்சல், கன்னியாகுமரி தலா 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.