தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய கடல்சார் மனிதவள மாநாட்டு மலரை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட்டு, சிறந்த கடல்சார் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், வேலை வாய்ப்பு மிகுந்த கடல்சார் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலோர மாவட்டங்களில் மாலுமிகள் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
எண்ணூர்-மணலி சாலை பணிகளுக்காக சென்னை துறைமுகசபை சார்பில் இதுவரை 48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் மேலும் 19 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.
தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 40 புதிய கப்பல்கள் வாங்கப்பட உள்ளது என்று கூறிய வாசன், இவற்றில் 26 கப்பல்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகிறது என்றார்.