Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒபாமாவை தனி நபராக எதிர்க்கவில்லை- மார்க்சிஸ்ட்

ஒபாமாவை தனி நபராக எதிர்க்கவில்லை- மார்க்சிஸ்ட்
, செவ்வாய், 2 நவம்பர் 2010 (12:33 IST)
அமெரிக்க அதிபர் ஒபாமாஇன் இந்திய வருகையை நாங்கள் அவர் ஒரு தனிப்பட்ட நபர் என்ற வகையில் எதிர்க்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் விளக்கமளித்த ராமகிருஷ்ணன், "அமெரிக்க அதிபராகவும், அந்நாட்டுக் கொள்கையின் சின்னமாகவும் ஒபாமா இருப்பதை எதிர்த்துத்தான் ஆர்பாட்டம் செய்கிறோம். எனினும் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வோம்.

போபால் விஷவாயு வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு இன்னமும் வழங்கப்படவில்லை. இதில் தொடர்புடைய ஆண்டர்சன் இன்னும் அமெரிக்காவில்தான் உள்ளார். அவரை இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. மேலும் ஒபாமாவுடன் வணிகக்குழு ஒன்றும் வருகை தருகிறது.

அவர்கள் நோக்கமெல்லாம் இந்தியாவில் சில்லறை வணிகத்தைத் துவங்குவதுதான். இவர்ற்றைத்தான் இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கிறோம் என்பதை வைகோ புரிந்து கொள்ளவேண்டும்." என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil