Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்.எம்.கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்க! பிரதமருக்குப் பழ.நெடுமாறன் வேண்டுகோள்

Advertiesment
சிறிலங்க கடற்படை தமிழக மீனவர்கள் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன் மன்மோகன் சிங் கிருஷ்ணா இராசபக்சே
, வியாழன், 12 ஆகஸ்ட் 2010 (17:19 IST)
FILE
சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்று பகிரங்கமாகக் கூறியுள்ள அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் சிறிலங்க கடற்படையினரின் நடவடிக்கைகை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், அதற்காக சிறிலங்க அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைச்சர் கிருஷ்ணா அளித்துள்ள பதில்கள் தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக நெடுமாறன் கூறியுள்ளார்.

“இலங்கை கடறபகுதிக்கு எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களபாதுகாக்க முடியாது என இந்திவெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பததமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

உலகெங்கும் பல்வேறு நாடுகளைசசேர்ந்த மீனவர்கள் கடலில் அவர்களை அறியாமல் எல்லைத் தாண்டிச் செல்வதுண்டு ஆனாலஅவர்களையெல்லாம் யாரும் சுட்டுக்கொல்வதில்லை. குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தானகடலில் நுழைந்து விட்டால் அவர்கள் சுடப்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் கடற்படஅவர்களைக் கைது செய்து சிறையில் வைக்கிறது. மேற்கு வங்க மீனவர்கள் வங்க எல்லைக்குளபுகுந்துவிட்டால் அவர்களை வங்க தேசக் கடற்படை கைது செய்கிறதே தவிர சுடுவதில்லை. ஏனஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையுமசிங்கள மீனவர்களஇந்திய கடற்படஇதுவரை சுட்டதேயில்லை.

1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆண்டு காலமாக சிங்களககடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500 பேருக்கு மேலசுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடலுறுப்புகளஇழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகளும் வலைகளுமசேதப்படுத்தப்பட்டுள்ளன. நமது கடல் எல்லைக்குள்ளாகவே இவ்வளவும் நடைபெறுகிறது. இராமேசுவரத்திற்கு அருகேயுள்ள வாழைக்குடா என்ற தமிழகச் சிற்றூரில் சிங்களக் கடற்படவந்திறங்கி அங்குள்ள மீனவர்களை சுட்டும் அவர்களின் குடிசைகளைக் கொளுத்தியுமஅட்டூழியம் செய்துவிட்டுத் திரும்பியது. இந்தியக் கடற்படை இதுவரை எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நமதமீனவர்களுக்குச் சர்வதேச சட்டங்களின்படி நட்டஈட்டினை சிங்கள அரசிடம் பெற்றுத்தஇதுவரை எந்த முயற்சியும் இந்திய அரசு செய்ததில்லை.

வெளியுறவுத்துறை அமைச்சரஎஸ்.எம். கிருஷ்ணா இராசபக்சேயின் குரலில் பேசுகிறார். இவரைப் போன்றவர்களஅயலுறவு அமைச்சராக இருக்கும்வரை தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல, இந்திகுடிமக்களுக்கே எத்தகையப் பாதுகாப்பும் ஒருபோதும் இருக்காது.

சொந்த நாட்டமக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அந்பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் எவற்புறுத்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் நெடுமாறன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil