கள்ளக் குறிச்சியில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் விழா கூட்டம் மாவட்ட, நகர காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்படாமல் தனிப்பட்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இதில் மத்திய மந்திரி ப. சிதம்பரம் கலந்து கொள்ள கூடாது. இதனையும் மீறி பங்கேற்றால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் தெரிவிக்கையில்:
கள்ளக்குறிச்சியில் வருகிற 18-ந்தேதி காமராஜர் பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மத்திய மந்திரி ப. சிதம்பரம் கலந்து கொள்வது உறுதி.
விழாவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக் கரசர், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி எம்.பி. மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான அழைப் பிதழ் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் முறைப் படி அனுப்பப் படும்.
என்று கூறியுள்ளார்.