விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை வெட்டிக் கொன்ற ரவுடியை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
கடந்த 27ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்த நாகரத்தினத்தை மேட்டுப்பட்டியை சேர்ந்த ரவுடி குமார் வெட்டிக் கொன்றார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி குமாரை காவல்துறையினர் இன்று சுட்டுக் கொண்டனர்.
இதனிடையே ரவுடி குமாருடன் தகராறில் ஈடுபட்டு விஷம் குடித்த அவரது மனைவி சோலையம்மாளும் உயிரிழந்தார்.