பிரபல தமிழ் நடிகை குஷ்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று நடிகை குஷ்பு கருத்து தெரிவித்திருந்தார்.
குஷ்புவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் குஷ்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 22 வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக் வர்மா, பி.எஸ்.சவ்கான் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், குஷ்புவுக்கு பேச்சு உரிமை உண்டு. அதில் யாரும் எந்த விதத்திலும் தலையிட முடியாது. குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.
தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. எனவே குஷ்புவுக்கு எதிரான 22 கிரிமினல் வழக்குகளையும் நிராகரிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.