Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திண்டுக்கல்லில் தலித் இளைஞர் இழிவைச் சந்தித்தார்

Advertiesment
திண்டுக்கல்லில் தலித் இளைஞர் இழிவைச் சந்தித்தார்
, வியாழன், 14 ஜனவரி 2010 (13:59 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மெய்க்கோவில்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் தலித் இளஞரை அதே கிராமத்தில் வசித்து வரும் மேல் சாதிக் கிறித்துவர்கள் மலம் திங்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

சடையாண்டி என்ற அந்த தலித் இளைஞர் மெய்க்கோவில்பட்டியின் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர். இவர் சாதிக் கிறித்துவர்கள் அதிகம் உள்ள தெருவில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி சென்ற போது, சுமார் 10 சாதிக் கிறித்துவர்கள் அவரை வழிமறித்தனர் என்றும், தங்கள் தெருவில் தலித்துகள் காலில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்ற உத்தரவு இருப்பது தெரியாதா என்று அவரை மிரட்டியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செருப்பைக் கழகற்றி அந்த தலித் இளைஞரை அவர்கள் அடித்ததாகவும், அந்த கும்பலில் ஒருவர் மலத்தை திங்குமாறு செய்ய வலியுறுத்தியதாகவும் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் அந்த தலித் இளஞர் புகார் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil