காஞ்சிபுரம்: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வந்தவாசி தொகுதியில் பிரசாரத்திற்கு இடையே காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைக் கூறினார்.
வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு சென்ற போது மக்களிடையே நல்ல வரவேற்பைக் காண முடிந்தது. தி.மு.க., ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
எனவே 2 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. தி.மு.க.-வினர் தோல்வி பயத்தில் வன்முறையை தூண்டி விடுகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.