அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம் கொள்ளிடத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
சென்னை, புறநகர் பகுதி மற்றும் தமிழகம் முழுவதும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. நாகப்பட்டிணம் மாவட்டம் கொள்ளிடத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளிலும் ஒரு சில பகுதிகளிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.