Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோ‌ல்‌வி பய‌த்தா‌ல் ஜெயல‌‌லிதா இடைத்தேர்தல் புறக்கணிப்பு : மு.க.ஸ்டாலின்

தோ‌ல்‌வி பய‌த்தா‌ல் ஜெயல‌‌லிதா இடைத்தேர்தல் புறக்கணிப்பு : மு.க.ஸ்டாலின்
நெல்லை , புதன், 5 ஆகஸ்ட் 2009 (11:23 IST)
''தோல்வி பயம் காரணமாகவே ஜெயலலிதா தேர்தலை புறக்கணித்துள்ளார்'' என்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஸ்ரீவைகுண்ட‌ம் தொகு‌தி‌யி‌ல் ி.ு.க கூட்டணி சார்பில் போ‌ட்டி‌யிடு‌ம் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டியை ஆத‌ரி‌‌த்து துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் பேசுகை‌யி‌ல், இந்த தொகுதியில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விட்டுச்சென்ற பணியை தொடருவதற்காக மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் மக்களை தேடி வரலாம். அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என சொல்வார்கள். இந்த தேர்தலில் சில கட்சிகள் வரவே இல்லை. வந்தாலும் வெற்றி பெறப்போவதில்லை என்ற காரணத்தினால் அச்சத்தோடு இருக்கின்றனர்.

அ.ி.ு.க போட்டியிடவில்லை என்றவுடன் வைகோ, ராமதாஸ் ஆகியோரும் போட்டியிடவில்லை என்றனர். அம்மாவும் போட்டியிடவில்லை. சகோதரர்களும் போட்டியிடவில்லை. ஆனால், அந்த கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. இவர்கள் ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.

அ.ி.ு.க, ம.ி.ு.க, பா.ம.க கட்சிகள் ஜனநாயகத்தை பற்றி கவலைப்படவில்லை. தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தால் தேர்தல் களத்தை புறக்கணித்துள்ளனர். அவர்கள் மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ கவலைப்படுகிறார்களா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நாட்டு மக்களுக்காக உழைப்பவர் முதல்வர் கருணாநிதிதான்.

தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் முதல்வர் நிறைவேற்றியிருக்கிறார். கிலோ அரிசி 2 ரூபாய் என அறிவித்து நிறைவேற்றியதுடன், ஒரு ரூபாயாகவும் குறைத்தார். கூட்டுறவு கடன் தள்ளுபடி, கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை என்று தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள், உறுதிமொழிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். அப்படிப்பட்ட ஆட்சிக்கு பொதுமக்கள் என்றும் துணை நிற்க வேண்டும்.

வேலை உறுதி திட்டத்தை இந்தியாவிலேயே சிறப்பாக நிறைவேற்றும் முதல் மாநிலம் தமிழ்நாடுதான். பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றும் நல்லாட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். காங்கிரசுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எ‌ன்று மு.க.‌ஸ்டா‌லி‌ன் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil