கடந்த ஜூன் மாதம் ஜெப்பூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் ஒரு தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்ற மாணவி எஸ்.தர்ஷினி, முதலமைச்சர் கருணாநிதியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது மாணவியின் பெற்றோர் சுரேஷ் பாபு- கெளரி, பயிற்சியாளர் கந்தசாமி, சென்னை அக்குவாட்டிக் கிளப்பின் தலைவர் மாருதி ஆகியோர் உடன் இருந்தனர்.