தமிழகத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சந்தன குமாரும், இளையான்குடி தொகுதியில் பி.எம்.ராஜேந்திரனும், கம்பம் தொகுதியில் சசிகுமாரும் போட்டியிடுக்கின்றனர்.
பர்கூர் தொகுதியில் அசோகனும், தொண்டாமுத்தூர் தொகுதியில் சின்ராஜிம் போட்டியிடுகின்றனர் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.