போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளதையடுத்து முதலமைச்சர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை இன்று பிற்பகல் முடித்துக் கொண்டார்.
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனிடையே உண்ணாவிரதத்தில் பேசிய கருணாநிதி, இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 12.35 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் கருணாநிதி, காரில் புறப்பட்டு சென்றார்.