Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி தமிழக‌த்த‌ி‌ல் நாளை வேலை நிறுத்தம்

Advertiesment
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி தமிழக‌த்த‌ி‌ல் நாளை வேலை நிறுத்தம்
செ‌ன்னை , புதன், 22 ஏப்ரல் 2009 (09:21 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி தமிழக‌ம் முழுவதும் நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ‌தி.மு.க. தலைவரு‌ம், முதலமைச்சருமான கருணாநிதி அறிவித்து உள்ளார்.

இது தொ‌ட‌ர்பாக அவ‌ர் நே‌ற்‌றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் இன்று எழுதியுள்ள உடன்பிறப்புகளுக்கான கடிதத்தைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23.4.2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல, இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும்கூட என்கிற உணர்வோடு இந்த வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன் எ‌ன்று கருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil