Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய கம்யூனிஸ்டுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

Advertiesment
இந்திய கம்யூனிஸ்டுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
செ‌ன்னை , திங்கள், 30 மார்ச் 2009 (10:38 IST)
அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌‌ணி‌யி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌க்கு வடசென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி) ஆ‌கிய 3 தொகு‌திக‌ள் ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌‌மிழக‌த்‌‌தி‌‌ல் மே 13ஆ‌ம் தே‌தி நடைபெற உ‌ள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த அணியில் முதலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன், முன்னாள் மாநில செயலர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்டோர் நேற்று மாலை ஜெயலலிதாவுடன் அவருடைய வீட்டில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய தா.பாண்டியன், ''அ.தி.மு.க கூட்டணியில் எங்களுக்கு வட சென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன'' என்றார்.


Share this Story:

Follow Webdunia tamil