Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி போ‌ட்டி‌யிடு‌ம் தொகு‌திக‌ள் அ‌றி‌வி‌ப்பு

Advertiesment
‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி போ‌ட்டி‌யிடு‌ம் தொகு‌திக‌ள் அ‌றி‌வி‌ப்பு
சென்னை , திங்கள், 30 மார்ச் 2009 (10:11 IST)
ி.ு.க அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை முதலமை‌ச்ச‌ரகருணாநிதி நேற்று மாலவெளியிட்டார்.

மக்களவைத் தேர்தலில், தி.ு.க அணியில் தி.ு.க.வுக்கு 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக நேற்று உடன்பாடு ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தேர்தல் குழுவில் உள்ள கே.‌வி.தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.‌வி.ே.எ‌ஸ்.இளங்கோவன், டி.சுதர்சனம் ஆகியோர், அ‌ண்ணஅறிவாலயம் வந்தனர்.

அங்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், தயாநிதிமாறன் ஆகியோரை கொண்ட தி.ு.க தேர்தல் குழுவினருடன் பேசினர். இரண்டு மணி நேரம் தீவிர ஆலோசனை நடைபெற்றது.

பின்னர், மாலை 6 மணிக்கு தி.ு.க தலைவர் கருணாநிதி அறிவாலயம் வந்தார். தி.ு.க கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது இறுதிசெய்யப்பட்டது.

முதலில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் கருணாநிதி கொடுத்தார். அதைத் தொடர்ந்து தி.ு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அவர் வெளியிட்டார்.

ி.ு.க தொகுதிகள் : திருவள்ளூர் (தனி), வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருப்பெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கரூர், பெரம்பலூ‌ர், நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி.

காங்கிரஸ் தொகுதிகள் : காஞ்சிபுரம் (தனி), ஆரணி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தென்காசி (தனி), திருநெல்வேலி, புதுச்சேரி.

விடுதலை ‌சிறு‌த்தைக‌ளதொகுதிகள் : விழுப்புரம்(தனி), சிதம்பரம்(தனி).

முஸ்லிம் லீக் தொகுதி : வேலூ‌்.

இந்த தொகுதி உடன்படிக்கையில் முதலமைச்சர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் கையெழுத்திட்டனர். அதைத் தொடர்ந்து தொகுதிகள் பட்டியலை முதலமைச்சர் கருணாநிதியிடம் இருந்து கே.வி.தங்கபாலு பெற்றுக் கொண்டார்.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் வருகிற ஏப்ரல் 2ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி நேர்காணல் நடத்துகிறார். அதன்பிறகு, தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிடுவார்.

Share this Story:

Follow Webdunia tamil