அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர பா.ம.க முடிவெடுத்ததை தொடர்ந்து மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து இன்னும் 2 நாளில் கடிதம் கொடுக்க இருப்பதாக அன்புமணி கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர பா.ம.க முடிவெடுத்ததை தொடர்ந்து மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து இன்னும் 2 நாளில் கடிதம் கொடுக்க உள்ளேன். இதேபோல் வேலுவும் கடிதம் கொடுக்க உள்ளார் என்றார்.