தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான ஓமக்குச்சி நரசிம்மன் இன்று சென்னையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஓமக்குச்சி நரசிம்மன் இருந்தார். இன்று காலை அவர் உயிரிழந்தார்.
சூரியன், காதலன் உட்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தவர் ஓமகுச்சி நரசிம்மன்.
சூரியன் படத்தில் கவுண்டமணிக்கும் இவருக்குமான நகைச்சுவை காட்சிகள் பெரும் அளவில் பேசப்பட்டது.
காதலன் படத்தில் வடிவேலுவுக்கு இவருக்குமான நகைச்சுவை காட்சிகள் பெரும் அளவில் பேசப்பட்டது.
தனது ஒல்லியான தேகத்தால் ஓமக்குச்சி என்ற அடைமொழியை பெற்றதுடன் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.