இலங்கை தமிழர் பிரச்சனையில் முரணாக பேசுகிறார் ஜெ.:தங்கபாலு குற்றச்சாட்டு
செய்தியாளர் பெருமாள்
Advertiesment
சென்னை , செவ்வாய், 10 மார்ச் 2009 (18:25 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு குற்றம் சாற்றியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக யார் என்ன செய்தாலும் காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இலங்கையில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு மத்திய அரசை குறைசொல்லக் கூடாது. மத்திய அரசின் ஒத்துழைப்பின் பேரிலேயே இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனாலும் இந்த பிரச்சனையில் மத்திய அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும்.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட முடியாது என்று, உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்புவரை கூறிவந்த ஜெயலலிதா, இப்போது வேறுமாதிரியாக பேசுகிறார். இப்படி முரண்பாடாக பேசுவதற்கு அவருடைய முந்தையை அறிக்கையே சான்று.
இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ உதவி செய்யவில்லை. இலங்கை அரசுக்கு கம்யூனிஸ்ட் ஆளும் சீனாதான் இராணுவ உதவி வழங்கி வருகிறது. இதை அந்த கட்சியினர் மறுக்க முடியுமா?