முரசொலி அறக்கட்டளை சார்பில் இந்தாண்டுக்கான கலைஞர் விருது மூத்த பத்திரிகையாளர் சோலைக்கு வழங்கப்படுகிறது.
அத்துடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புகைப்படக் கலைஞர் யோகா ஆகியேருக்கும் கலைஞர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய்க்கான பொற்கிளியும் வழங்கப்படுகிறது.
நடிகர் தியாகுக்கு முரசொலிமாறன் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறும் விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி, தி.மு.க. பொதுச் செயலர் க.அன்பழகன் ஆகியோர் விருதுகளை வழங்கி கவுரவிக்கின்றனர்.