கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு தமிழகத்தில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.
இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ, கலைக் கல்லூரி எனஅனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இலங்கையில் தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் கலை கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிடவில்லை.