ஈழத் தமிழருக்காக தீக்குளித்த காங்கிரஸ் இணை செயலர் மரணம்
நாகப்பட்டிணம் , சனி, 7 பிப்ரவரி 2009 (18:10 IST)
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் தீக்குளித்த நாகை மாவட்டம் சீர்காழி காங்கிரஸ் கட்சியின் இணை செயலர் ரவிச்சந்திரன் இன்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பிடாரி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). இவர் இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடியே உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.ரவிச்சந்திரனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ரவிச்சந்திரனின் உடல் 65 சதவீதம் தீக்காயங்களுடன் கருகி விட்டதால் இன்று பிற்பகலில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவரது உடலுக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும், தமிழின உணர்வாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.