இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசு கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் புதுச்சேரியில் இன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மவுன ஊர்வலம் நடைபெற்றது.
சுப்பையா சிலை அருகே துவங்கிய ஊர்வலம் கடற்கரை சாலையில் உள்ள காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., ம.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி, பெரியார் திராவிடர் கழகம், மீனவ விடுதலை வேங்கைகள் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.