சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவை மாவட்டம், சோமனூரை சேர்ந்த அண்ணாமலை (64) என்பவர் ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் உள்ள தனது மகள் சகுந்தலா வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த அண்ணாமலை, அப்போது அந்த வழியாக வந்த ஏழு வயது சிறுமி அண்ணாமலையிடம் தண்ணீர் குடிக்க கேட்டார். அப்போது அண்ணாமலை அந்த சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் சிறுமி. இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் புன்செய்புளியம்பட்டி காவல்துறையில் புகார் செய்ததையடுத்து அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கோபிசெட்டிபாளையம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், அண்ணாமலைக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.