குடிபோதையில் வாகனம் ஓட்டிய 30 பேர் உரிமம் ரத்து
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
கோபிசெட்டிபாளையத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 30 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் பழனிவேலு தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 223 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதில் வரியாக ரூ.4 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 550 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 21 பேரின் ஓட்டுனர் உரிமமும், உயிருக்கு தீங்கு ஏற்படும் விதத்தில் வாகனம் ஓட்டிய 9 பேர் ஓட்டுனர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.