Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயல‌லிதாவுட‌ன் ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் ச‌ந்‌தி‌ப்பு

Advertiesment
ஜெயல‌லிதாவுட‌ன் ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் ச‌ந்‌தி‌ப்பு
செ‌ன்னை , வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (11:24 IST)
WD
அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவை, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்க‌ள் சந்தித்து பேசினர்.

சிதம்பரம் நடராஜர் கோ‌யிலின் நிர்வாகப் பொறுப்புக்கு செயல் அலுவலரை அரசு நியமித்தது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, செயல் அலுவர் அங்கு பொறுப்பேற்றுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் நடராஜமணி தீட்சிதர் தலைமையில் 16 தீட்சிதர்கள் ஜெயலலிதாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து, கோ‌யில் பிரச்சனையை விளக்கிக் கூறினர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடராஜர் கோயிலை தமிழக அறநிலையத் துறை ஏற்றது குறித்தும், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது குறித்தும் ஜெயலலிதாவிடம் அவர்கள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil