Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போரா‌ட்‌ட‌ம் தொடரு‌ம் : ராமதாஸ்

Advertiesment
போரா‌ட்‌ட‌ம் தொடரு‌ம் : ராமதாஸ்
சென்னை , வியாழன், 5 பிப்ரவரி 2009 (10:16 IST)
இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அங்குள்ள தமிழர்கள் அனைத்து அதிகாரமும் பெற்று சம உரிமையுடன் வாழும் நிலைமை, ஏற்படுகிற வரையில் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவேலை நிறுத்தத்தை முடியடிக்க அரசும், அரசு எந்திரமும் முழுவீச்சில் செயல்பட்டாலும் பொதுவேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எல்லா தரப்பு மக்களும் இந்த வேலைநிறுத்தம் வெற்றிபெற ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார்கள். குறிப்பாக, வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள், குறுந்தொழில் அதிபர்கள், தனியார் பேரு‌ந்து மற்றும் லாரி உரிமையாளர்கள், ஆட்டோ ஓ‌ட்டுன‌ர்கள் முதலானோர் தமிழின உணர்வுடன் பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் பேரு‌ந்துகளை இயக்கும்படி ஓட்டுநர்களையும், நடத்துனர்களையும் அரசு கட்டாயப்படுத்தியிருக்கிறது. இந்த பொதுவேலை நிறுத்த போராட்டம் இங்குள்ள, எந்தவொரு கட்சியையோ அல்லது எந்தவொரு அரசையோ எதிர்த்து நடத்தப்படவில்லை. இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலையை கண்டித்தும், அதை நடத்திக் கொண்டிருக்கிற இனவெறி பிடித்த ராஜபக்சே அரசை எதிர்த்தும், அந்த படுகொலையை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுமே நடத்தப்பட்டது. அதனால்தான் அனைத்து தரப்பு மக்களும் தமிழ் உணர்வு கொண்ட அனைவரும் இதை ஆதரித்து வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.

இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தந்து, அதனை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இத்துடன் நமது போராட்டம் முடிந்துவிடவில்லை. இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அங்குள்ள தமிழர்கள் அனைத்து அதிகாரமும் பெற்று சம உரிமையுடன் வாழும் நிலைமை, ஏற்படுகிற வரையில் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். அதற்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

பொதுவேலை நிறுத்த போராட்டத்தின் போது முழு அமைதி நிலவியதாக மாநில காவல்துறை தலைவர் அறிவித்திருக்கிறார். எனவே இந்த போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டவர்களையும், வேலை நிறுத்தம் தொடங்கியதற்கு பிறகு அரசியல் பழிவாங்கும் வகையில் கைது செய்யப்பட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும், குறிப்பாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க.வினரையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil