நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட வலியுறுத்துவதாக கூறி, சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியிடம் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் புகார் மனு ஒன்று கொடுத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முகோபாத்யாயாவை, காங்கிரஸ் கட்சியின் பழனி நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய பார்கவுன்சில் முன்னாள் தலைவருமான கார்வேந்தன் தலைமையில் 25 காங்கிரஸ் வழக்கறிஞர்கள் இன்று சந்தித்தனர்.
அப்போது, தங்களை சிலர் நீதிமன்ற பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாகவும், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட வலியுறுத்துவதாகவும் புகார் கூறினர்.
மேலும் நீதிமன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து காங்கிரஸ் வழக்கறிஞர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நீதிபதி உறுதியளித்தார்.