அந்தியூர் வனப்பகுதியில் நோயினால் குட்டியானை பலி
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
அந்தியூர் வனப்பகுதியில் நோயினால் குட்டியானை ஒன்று இறந்தது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியில் யானைகள் அதிகமாக வசித்து வருகின்றது. கடந்த மாதம் நோயின் காரணமாக சுமார் இருபத்தி ஐந்து வயது மதிக்கதக்க இரண்டு பெண் யானைகள் ஐந்து நாள் இடைவெளியில் இறந்தது.
இதன்பின் நேற்று அந்தியூர் வனப்பகுதி அத்தாணி வனத்தில் ஆறு மாதமான குட்டியானை ஒன்று நோய்தாக்கி இறந்துள்ளது. இதுவும் பெண்யானை என்பது குறிப்பிடதக்கது.
வரக்கோம்பை என்ற இடத்தில் இறந்த இந்த யானை குட்டியின் உடலை காட்டு விலங்குகள் பாதியளவு தின்றுவிட்டது. வனத்துறை மருத்துவர் பிரேத பரிசோதனையில் யானை நோய் தாக்கி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.