இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசை கண்டித்து கோவையில் இன்று பத்திரிகையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு உணவகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, இலங்கையில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர்.