Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணா நினை‌விட‌த்‌தி‌ல் கருணா‌நி‌தி அ‌ஞ்ச‌லி

Advertiesment
அண்ணா நினை‌விட‌த்‌தி‌ல் கருணா‌நி‌தி அ‌ஞ்ச‌லி
பேர‌றிஞ‌ரஅண்ணா ‌நினைவநாளமு‌ன்‌னி‌ட்டசெ‌ன்னை‌யி‌லஉ‌ள்அவரது ‌நினை‌விட‌த்‌தி‌லமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றமல‌ரவளைய‌மவை‌த்தஅ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர்.

முதுகுவலியால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு ஆம்புலன்ஸ் வேன் மூலம் செ‌ன்னை மெ‌‌ரீனா கட‌ற்கரை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ள அண்ணா சமாதிக்கு காலை 8.35 மணிக்கு வந்தார். ‌பி‌ன்ன‌ர் அண்ணா ‌‌நினை‌விட‌ம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமை‌ச்ச‌ர் ராசா ஆகியோர் வந்‌திரு‌ந்தன‌ர்.

மு‌ன்னதாக தி.மு.க. சார்பில் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இருந்து அமைதிப்பேரணி புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.

இ‌ந்த பேரணியில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பரிதி இளம்வழுதி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி, மதிவாணன், தமிழரசி, சுரேஷ்ராஜன், செல்வராஜ், சாமிநாதன், ஐ. பெரியசாமி, கே.பி.பி. சாமி, கீதாஜீவன், தங்கம் தென்னரசு,

மத்திய அமை‌ச்ச‌ர்கள் டி.ஆர்.பாலு, வேங்கடபதி, சுப்பு லட்சுமி ஜெகதீசன், ராதிகா செல்வி, பழனி மாணிக்கம், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் குப்புசாமி, தென் மண்டல அமைப்பு செயலர் மு.க.அழகிரி, நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தயாநிதி மாறன், மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் கனிமொழி உள்பட கழக முன்ன‌‌‌‌ணியினர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil