இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருந்து வரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே 3-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கோஷமிட்டு அவர்களது படங்களை தீ வைத்து எரித்தனர்.
மேலும் காங்கிரஸ் கொடிகளையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.